முதலியார்பேட்டை பியூட்டி பார்லரில் விபசாரம்- 5 பெண்கள் அதிரடி மீட்பு

முதலியார் பேட்டை 100 அடி ரோட்டில் பியூட்டி பார்லர் பெயரில் விபசாரம் நடத்திய கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) என்ற பெயரில் பெரிய அளவில் விபசாரம் நடப்பதாக முதலியார் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் நேற்று போலீசார் அந்த பியூட்டி பார்லரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பியூட்டி பார்லரில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த திண்டிவனத்தை சேர்ந்த வாடிக்கையாளர் சரவணன் என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பியூட்டி பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியது எல்லைபிள்ளை சாவடியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது.

பியூட்டி பார்லருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ், ஸ்பா செய்து அவர்களுக்கு தேவையான பெண்களை வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பதும், பியூட்டி பார்லரிலேயே உல்லாசத்துக்கு அனுமதித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 பெண்களையும் போலீசார் மீட்டனர். அந்த பெண்களை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com