இயற்கை வழி சிகிச்சை மையத்தில் விபசாரம்: அழகி மீட்பு - புரோக்கர் கைது

கோவை அருகே இயற்கை வழி சிகிச்சை மையத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட அழகியை மீட்ட போலீசார் புரோக்கரை கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியம் சாலையில் இயற்கை வழி சிகிச்சை மையம் உள்ளது. இங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் அந்த மையத்தை கண்காணித்தனர். இதில் அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த சிகிச்சை மையத்துக்குள் திடீரென்று நுழைந்து சோதனை செய்ததில் அழகி ஒருவர் சிக்கினார்.இதைத்தொடர்ந்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த புரோக்கர் பார்த்தசாரதி (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட அழகி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com