சொத்துக்காக தந்தை வெட்டிக்கொலை: அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேர் கைது

சொத்துக்காக தந்தையை வெட்டி கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க. வட்ட செயலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை தெற்கு வெளிவீதி, சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 57), நிதி நிறுவன உரிமையாளர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு நடந்து செல்லும் போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது.

பின்னர் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சொத்து பிரச்சினையில் மணியை அவரது மகனே கொலை செய்தது தெரிய வந்தது.

மணியின் முதல் மனைவி ராஜாத்தி. இவர்களது மகன் காாத்திகேயன் (33), அ.தி.மு.க. வட்ட செயலாளர். இந்த நிலையில் மணி 2-வதாக தனலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு தெற்கு வெளி வீதியில் வசித்து வந்தார். சில ஆண்டுக்கு முன்பு 2-வது மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. இதனால் கார்த்திகேயன் அனைத்து சொத்தையும் தனக்கு எழுதி கேட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சொத்து தகராறில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கொலை செய்ய கார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இதற்காக நண்பர்கள் மணிகண்டன்(32), விக்னேஸ்வரன்(33), தெட்சிணாமூர்த்தி(26), கண்ணாயிரம்(32) ஆகியோர் உதவியை நாடினார். அவர்கள் அனைவரும் சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற மணியை வழிமறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com