சொத்து தகராறில் தம்பி மனைவி மீது தாக்குதல்: தந்தை- மகனுக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே சொத்து தகராறில் தம்பி மனைவி மீது தாக்குதலில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரி கல்காணி வட்டம் மேலத்தெருவில் வசிப்பவர் ரவிக்குமார், விவசாயி.

இவருக்கும் இவரது அண்ணன் ஜெயபால் என்பவருக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று இதனை தட்டிக்கேட்ட ரவிக்குமார் மனைவி தமிழ்ச்செல்வியை (வயது 37) ரவிக்குமாரின் அண்ணன் ஜெயபால், அவரது மகன்கள் சரவணன், நாராயணன், ஆகிய 3 பேரும் சேர்ந்து அடித்து உதைத்து காயப்படுத்தி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ,மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயபால் மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com