மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் - நிர்மலாதேவிக்கு காவல் நீடிப்பு

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவியின் காவலை ஆகஸ்டு 2-ந் தேதி வரை நீட்டித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார். #NirmalaDevi
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் - நிர்மலாதேவிக்கு காவல் நீடிப்பு
Published on

விருதுநகர்:

மாணவிகளிடம் செல்போனில் பாலியலுக்கு அழைக்கும் வகையில் தவறாக பேசிய புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த பேராசியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பேராசிரியை நிர்மலாதேவியின் குரல் பரிசோதனையும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிர்மலாதேவியின் காவல் இன்றோடு நிறைவுபெற்றதால் சாத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது காவலை ஆகஸ்டு 2-ந் தேதி வரை நீட்டித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார். #NirmalaDevi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com