

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எட்டாவது நாளான இன்று காலை மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க., உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கியிருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #BudgetSession #LokSabha #RajyaSabha #Adjourned #tamilnews