

அதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.
தமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
தொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.
அஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.
முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.