புரோ கபடி லீக் போட்டி - மும்பை அணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் இன்று பதிலடி கொடுக்குமா?

7-வது புரோ கபடி ‘லீக்‘ போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பசல் தலைமையிலான யுமும்பா- அபோசர் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொல்கத்தா:

மும்பை அணி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு டையுடன் 37 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

அந்த அணி தெலுங்கு டைட்டன்சை ஏற்கனவே 31-25 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடும். மும்பை அணி தெலுங்கு டைட் டன்சை தோற்கடித்து 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியில் அபிஷேக் சிங் (70 புள்ளி), கேப்டன் பசல் (40 புள்ளி), சந்தீப்நர்வால் (45 புள்ளி) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 4 வெற்றி 7 தோல்வி, 2 டையுடன் 30 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் தான் மும்பையிடம் தெலுங்கு டைட்டன்ஸ் தோற்றது. அதற்கு அந்த அணி இன்று பதிலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ரைடில் சித்தார்த் தேசாய் முதுகெலும்பாக திகழ்கிறார். அவர் 109 புள்ளி எடுத்துள்ளார். விஷால் பரத்வாஜ் (49 புள்ளி), பர்கத் (35 புள்ளி) போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

83 போட்டி முடிவில் டெல்லி அணி 59 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.பெங்கால் வாரியர்ஸ் 2-வது இடத்திலும் (48), பெங்களூரு புல்ஸ் 3-வது இடத்திலும் (48), அரியானா 4-வது இடத்திலும் (46). உ.பி. யோதா 5-வது இடத்திலும் (42), ஜெய்ப்பூர் 6-வது இடத்திலும் (38) உள்ளன.

குஜராத் 8-வது இடத்திலும், புனே 10-வது இடத்திலும் தமிழ் தலைவாஸ் 11-வது இடத்திலும் பாட்னா 12- வது இடத்திலும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com