புரோ கபடி ‘லீக்’ தமிழ் தலைவாஸ் மீண்டும் சாதிக்குமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டியின் இன்று நடக்கும் ஆட்டத்தில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ஜோகீந்தர்சிங் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணியுடன் மோதுகிறது.
அஜய்தாகூர்
அஜய்தாகூர்
Published on

ஐதராபாத்:

7-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ் 48-17 என்ற புள்ளிகணக்கில் உ.பி. யோதாவையும், தபாங் டெல்லி 34-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும் தோற்கடித்தன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் அஜய்தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் - ஜோகீந்தர்சிங் நர்வால் தலைமையிலான தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 39-26 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி இருந்தது. இந்த சீசனில் வீரர்களின் மாற்றம் அந்த அணிக்கு முதல் ஆட்டத்தில் நல்ல பலனை கொடுத்தது.

கேப்டன் அஜய்தாகூர், ராகுல்சவுத்ரி, சபீர்பாபு, மஞ்சித்சில்லர், ரான்சிங், மோகித்சில்லர் போன்ற சிறந்த வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் உள்ளனர். இதனால் அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் சாதித்து 2-வது வெற்றியைப் பெறுமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

டெல்லி தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை வென்றிருந்தது. இதனால் அந்த அணியும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com