உன்னாவ் வழக்கு டெல்லிக்கு மாற்றம்: பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது - பிரியங்கா

உன்னாவ் சிறுமி விவகாரம் தொடர்பான வழக்குகள் டெல்லிக்கு மாற்றப்பட்டது உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

உன்னாவ் சிறுமி விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உன்னாவ் விவகாரத்தில் தொடர்புடைய வழக்குகளை டெல்லிக்கு மாற்ற உத்தர விட்டுள்ளது.

இந்த உத்தரவை மேற்கோள் காட்டி பா.ஜனதா அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் காட்டாட்சி நிலவுவதையும், மாநில பா.ஜனதா அரசு தோல்வி அடைந்து உள்ளதையும் உறுதிப்படுத்தும் வகையில் முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது.

குல்தீப்சிங் செங்கார் எம்.எல்.ஏ.வை தற்போது கட்சியில் இருந்து பா.ஜனதா நீக்கியதன் மூலம் ஒரு குற்றவாளிக்கு பாதுகாப்பு அளித்துள்ளதை ஒப்புகொண்டுள்ளது. தனது தவறை சரி செய்ய குறைந்தபட்சம் ஒரு படியை எடுத்து வைத்துள்ளது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com