ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணுக்காக பிரியங்கா பிரார்த்தனை

ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
பிரியங்கா
பிரியங்கா
Published on

ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக டெல்லி பிராச்சின் பகவான் வால்மீகி கோவிலில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.

ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்காக டெல்லி பிராச்சின் பகவான் வால்மீகி கோவிலில் நேற்று பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசும்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை எனவும், ஆனால் அந்த குடும்பத்துக்காகவும், அவர்களின் சமூகத்துக்காகவும் தான் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த குற்றத்தின் கொடூரத்தை அரசுகள் உணர்ந்து கொள்ளும்வரை இந்த விவகாரத்தை எழுப்புமாறு மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இறுதிச்சடங்கை போலீசாரே நடத்தியதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

தனது மகளின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தந்தையை அனுமதிக்காதது நமது கலாசாரத்தில் இல்லாதது எனவும் அவர் வருத்தத்துடன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com