

ஜெய்ப்பூர்:
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சில கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கடந்து செல்லும் வாகனங்களின் இழுவைத்திறன் மற்றும் அமரும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பலதரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதிலும், வரிவிதிப்பு கைவிடப்படாமல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ராஜஸ்தான் மாநிலத்துக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 143 சோதனைச் சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக அம்மாநில போக்குவரத்து துறை மந்திரி யூனுஸ் கான் இன்று அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு சுமார் 250 கோடி ரூபாயும், அவர்களின் விலைமதிப்புமிக்க நேரமும் மிச்சமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #Privatevehicles #tolltax #highways