ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு

ராஜஸ்தான் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் நேற்று முதல் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மாநில நெடுஞ்சாலைகளில் நேற்று முதல் தனியார் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 56 மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்களிடம் இருந்து சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக 143 மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

சுங்க கட்டணம் வசூலிக்கப்படாததால், பொதுமக்களுக்கு 250 கோடி ரூபாய் பலனாக கிடைக்கும் என்றும், நேரம் மிச்சமாகும் என்றும் அம்மாநில போக்குவரத்து மந்திரி யூனுஸ்கான் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com