

பாகூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் சேகர். (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி.
கணவன்- மனைவி இருவருமே புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தை அடுத்த கந்தன்பேட் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வந்தனர்.
சேகர் முள்ளோடையில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் பெண் காவலாளியாக வேலை பார்க்கிறார்.
சம்பவத்தன்று சரஸ்வதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை பார்த்து விட்டு சேகர் நேற்று இரவு கந்தன்பேட் பகுதி வீட்டுக்கு வந்தார்.
அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ் பெக்டர் அருணாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.