2023-ம் ஆண்டு சென்னையில் தனியார் ரெயில் சேவை

தென்னக ரெயில்வேயில் சென்னை-பெங்களூர், சென்னை - கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
ரெயில்
ரெயில்
Published on

ரெயில்வே துறையில் தனியாரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தற்போது லக்னோ - டெல்லி இடையே தேஜஸ் ரெயில் தனியார் மூலம் இயக்கப்படுகிறது.

இதே போல் நாடு முழுவதும் முக்கியமான நகரங்களுக்கு இடையே தனியார் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னக ரெயில்வேயில் சென்னை-பெங்களூர், சென்னை - கோவை, சென்னை- மதுரை வழித்தடத்தில் தனியார் ரெயில்கள் இயக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 2023-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

வழித்தடம், ரெயில் பெட்டிகளை ரெயில்வே துறை வழங்கும். ரெயில்களை இயக்கும் தனியார்கள் கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். பராமரிப்பு செலவுகளையும் தனியார் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி விட வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com