சத்துவாச்சாரி தனியார் விடுதியில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை

சத்துவாச்சாரி தனியார் விடுதியில் தங்கியிருந்த வங்கி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்துவாச்சாரி தனியார் விடுதியில் வங்கி பெண் ஊழியர் தற்கொலை
Published on

வேலூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் அரசப்பன் மகள் தமிழரசி (வயது 30). ஊசூரில் உள்ள வங்கியில் கிளர்க் வேலை செய்து வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரது ஊரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகேஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தமிழரசி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சத்துவாச்சாரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com