தனியார் நிறுவனத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 49 பேருக்கு வாந்தி-மயக்கம்

ஊத்துக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 49 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on: 

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை கிராம எல்லையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கம்பெனி சார்பில் உணவு வழங்கப்படுவது வழக்கம்.

நேற்று இரவு உணவை சாப்பிட்ட 49 தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் திருவள்ளுர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணவை சோதனைசெய்து பார்த்தபோது சாம்பார் சாதத்தில் பல்லி இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஞானமுத்து சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com