மேம்பாலத்தில் இருந்து குதித்து தனியார் நிறுவன ஊழியர் பலி

வடபழனி அருகே மேம்பாலத்தில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் தீடிரேன கீழே குதித்து பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அம்பத்தூர்:

வடபழனி தமிழன் தெருவை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 49).

இவர் கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து தனது மொபட்டில் பாடி மேம்பாலம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மேம்பாலம் நடுவில் வந்த போது திடீரென மொபட்டை சாலையோரத்தில் நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com