கும்பகோணம் அருகே தனியார் பஸ்- லாரி மோதல்: மாணவர்கள் உள்பட 30 பேர் காயம்

கும்பகோணம் அருகே இன்று பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் மாணவர்கள் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தில் முன்பகுதி சேதமான பஸ்.
விபத்தில் முன்பகுதி சேதமான பஸ்.
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாடாகுடியில் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்தில் இருந்து எதிரே ஒரு லாரி வந்தது.

அப்போது திடீரென பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் பஸ், லாரியின் முன்பக்கம் சேதமானது.

மேலும் இந்த விபத்தில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் ஆகாஷ், கர்ணன் (19), பரத்ராஜ் (20), ஸ்ரீவித்யா (21), சுபஸ்ரீ(20) மற்றும் ராமன் (60), பிரகாஷ் (21) முத்துகுமார் (19) உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கும்பகோணம், வலங்கைமான் பகுதிகளில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வேன் வந்தது. இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து நடந்ததும் பஸ் டிரைவரும், லாரி டிரைவரும் தப்பி ஓடி விட்டனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் பட்டீஸ்வரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com