திருச்சியில் தனியார் பஸ் நிறுவன ஊழியர் கொலை- சகோதரரிடம் போலீசார் விசாரணை

திருச்சி தென்னூரில் தனியார் பஸ் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் தனியார் பஸ் நிறுவன ஊழியர் கொலை- சகோதரரிடம் போலீசார் விசாரணை
Published on

திருச்சி:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள தோரங்காடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், தனியார் பஸ் நிறுவன ஊழியர். இவருக்கு சொந்தமான இடம் திருச்சி தென்னூர் தாசில்தார் சந்து என்ற இடத்தில் உள்ளது. இது தொடர்பாக நந்தகுமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் மோதல் இருந்து வந்தது.

இது தொடர்பாக நந்தகுமார் கடந்த 2 மாதங்களாக தென்னூருக்கு வந்து பிரச்சினைக்குரிய இடத்தில் தங்கியிருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னை 4 பேர் சேர்ந்து தாக்கியதாக  கூறி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் கூறி விட்டு சிசிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டார். 

இது தொடர்பாக தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சினையில் அவரது உறவினர்கள் நந்தகுமாரை தாக்கியதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நந்தகுமாரின் சகோதரரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே நந்தகுமார் உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது . பரிசோதனை முடிவில் நந்தகுமார் எப்படி இறந்தார் என்பதற்கான காரணம் தெரியவரும். அதனடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com