ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது

திருக்கனூர் அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது
Published on

பாகூர்:

திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் தினமும் காலையில் தனியார் பஸ்சில் வேலைக்கு வருவது வழக்கம். மேலும் வேலை முடிந்து அதே பஸ்சில் ஊர் திரும்புவார். அப்போது அந்த பஸ்சின் டிரைவரான கிளியனூரை சேர்த சூரியா (20)-க்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சூர்யா அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை விராம்பட்டினம் பீச் மற்றும்வெளியூர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியானாள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுவை குழந்தை நல குழு அதிகாரி ராஜேந்திரனிடம் முறையிட்டனர்.

இதையடுத்து நலக்குழு அதிகாரி ராஜேந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூரியாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சூரியாவை ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பதுங்கி இருப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு சென்று சூரியாவை கைது செய்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com