பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதி 11 பேர் காயம்

பொள்ளாச்சி அருகே தரைப்பாலத்தில் தனியார் பஸ் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
விபத்து
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் சேத்துமடையில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று (சனிக்கிழமை) காலை 5 .50 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இன்று காலை 6.40 மணிக்கு ஜமீன் ஊத்துக்குளியை தாண்டி ரெயில்வே தரை பாலத்தின் கீழ் பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தரை பாலத்தின் சுவரில் மோதியது .

இதில் பஸ்சில் பயணம் செய்த கார்த்திகேயன் (28 ), செந்தில் (25), சவு கார்த்திகா (29), ராமராஜ் (52 ), நாகப்பன் (58 ), மாராத்தாள் (53), லட்சுமி ( 48), கிருஷ்ணவேணி (43 ), மற்றொரு கிருஷ்ணவேணி (28 ), சரவணன் ( 21 ), மாரியப்பன் (36) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

விபத்து குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com