அருப்புக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

அருப்புக்கோட்டை அருகே தனியார் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.
தீ விபத்து
தீ விபத்து
Published on

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி செல்லும் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்தநிலையில் இந்த வங்கியில் இருந்த புகை வந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த காவலாளி, இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். உடனே மேலாளர் விரைந்து வந்து வங்கியை திறந்து பார்த்தபோது வங்கிக்குள் இருந்து புகை அதிகமாக வெளியேறியது. உள்ளே சென்று பார்த்த போது எலக்ட்ரிக் சாமான் பொருட்கள் அனைத்தும் எரிந்து கிடந்தன. 

இதில் 4 ஏ.சி., 7 மின்விசிறி, கண்காணிப்பு கேமரா, 2 கணினிகள், 2 பணம் எண்ணும் எந்திரம் ஆகிய பொருட்கள் எரிந்து நாசமாகி கிடந்தன. தீ மேலும் பரவாமல் இருக்க உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என பந்தல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த தீவிபத்தில் ரூ.2½ லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com