கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலம் - புழல் சிறை வார்டர்கள் 8 பேர் இடம் மாற்றம்

சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலமானதால் 2 தலைமை வார்டர்கள் உள்பட 8 வார்டர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். #PuzhalJail
கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலம் - புழல் சிறை வார்டர்கள் 8 பேர் இடம் மாற்றம்
Published on

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா உத்தரவின் பேரில் தண்டனை சிறையில் பணிபுரிந்த தலைமை வார்டர்கள் விஜயராஜ் ஊட்டி கிளை சிறைக்கும், கணேசன் செங்கம் கிளை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com