சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் அச்சக ஊழியர் தற்கொலை

சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த அச்சக ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேலம்:

சேலம் பெரியபுதூர் விவேகானந்தர் தெருவில் உள்ள ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கிணற்றில் பிணமாக கிடந்தவர் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த பால்ராஜ் (வயது 41) என்பதும், அச்சகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், பால்ராஜ் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பால்ராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com