

வேலூர்:
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இணைப்பு பெற்று தேர்வு எழுத அனுமதி பெறுகிறது.
மாநில அரசின் தடையில்லா சான்று பெற்று சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகிறது. தற்போது இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில அரசு அங்கீகாரத்துடன் தான் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 42 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன. இதில் 18 பள்ளிகள் மாநில அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது தெரியவந்தது.
இந்த 18 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அமைக்க தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைத்தும் அதற்கான சான்றுபெற்று 3 மாதத்திற்குள் மாநில அரசு சான்றிதழ் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. #tamilnews