

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மார்ச் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்த ஊரடங்கை அறிவித்தார். அதன்பின் 2-வது முறையாக நீட்டிக்கும்போதும் நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். அதன்பின் மாநில முதலமைச்சர்களுடன் பலமுறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். 4-வது கட்ட ஊரடங்கு முடியும்போதும் உரையாற்றினார்.
இந்நிலையில ஊரடங்கு தளர்வு 2-ம் கட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. புதன்கிழமையில் இருந்து அவைகள் அமலுக்கு வருகின்றன.
இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுக்கிறார்.