பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சந்திப்பு

அமெரிக்காவில் பிரதமர் மோடி ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை சந்தித்து இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சந்திப்பு
பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி சந்திப்பு
Published on

நியூயார்க்:

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, ஐ.நா. பொதுசபை கூட்டத்தின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியை பிரதமர் மோடி இன்று நியூயார்க்கில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டுடனான வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் பிரதமர் மோடியை அதிபர் ஹசன் ரவுகானி சந்தித்து ஆலோசனை நடத்துவது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com