லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சி- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார்.
கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய மோடி
கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றிய மோடி
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடங்கியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. பிப்ரவரி 9-ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். 

துவக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

எதிர்காலத்தில் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் மாறும். புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இந்தியாவில் 25 ராணுவ தளவாட உபகரணங்களை தயாரிப்பதே நமது நோக்கம்.

பீரங்கி துப்பாக்கிகள், விமானந்தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com