பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கினார் அபுதாபி இளவரசர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆப் சயீத் விருதை அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் வழங்கினார்.
பிரதமர் மோடிக்கு விருது அணிவிக்கும் பட்டத்து இளவரசர்
பிரதமர் மோடிக்கு விருது அணிவிக்கும் பட்டத்து இளவரசர்
Published on

அபுதாபி: 

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டார். அங்கு அவர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் எடோவர்ட் பிலிப் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2 விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக பாரீசில் நிறுவப்பட்டு உள்ள நினைவுச் சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் பிரான்சில் வாழும் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.

அதன்பின், பாரீசில் இருந்து நேற்று புறப்பட்டு அமீரகம் செல்கிறார். அங்கு பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடன் இருதரப்பு, பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமதி பின் சயீத் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com