மூன்று நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் மோடி - சுஷ்மா வரவேற்பு

மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். அவருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மூன்று நாடுகள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் மோடி - சுஷ்மா வரவேற்பு
Published on

புதுடெல்லி:

சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து  கொண்டார்.

லண்டனில் நடைபெற்ற 25-வது காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் பின்னர், ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்தார். மோடிக்கு, ஏஞ்சலா மெர்கெல் விருந்து அளித்தார். அதன்பின் இரு நாடுகளின் உறவு குறித்து மோடி - மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, தனது மூன்று நாடுகள்  சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி புறப்பட்டார். இன்று காலை டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடியை, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com