தினத்தந்தி பவள விழா கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
தினத்தந்தி பவள விழா கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்
Published on

சென்னை:

இந்தியாவின் ‘நம்பர் 1’ தமிழ் நாளிதழ் என்ற சிறப்பை பெற்ற ‘தினத்தந்தி’ பவள விழா ஆண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று (திங்கட் கிழமை) ‘தினத்தந்தி’யின் பவள விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை  வந்தடைந்தார்.

அங்கு பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., எச்.ராஜா, தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன்  உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 10.20 மணியளவில் மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கு அவரை அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்தடைந்தார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கிறது.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com