கோவிலில் நடிகை ரோஜாவுடன் ‘செல்பி’ எடுத்த அர்ச்சகர்கள் - பக்தர்கள் அதிருப்தி

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் தங்களது பணியை மறந்து நடிகை ரோஜாவுடன் அர்ச்சகர்கள் செல்பி எடுத்த சம்பவம் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சிவன்மலை கோவிலுக்கு நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்
சிவன்மலை கோவிலுக்கு நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்
Published on

காங்கயம்:

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். அதுவும் விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகமாக இருக்கும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி நாட்டில் ஏற்படப்போகும் விளைவுகளை முன்னதாகவே உணர்த்தி விடும் சக்தி கொண்டது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா நேற்று சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு மதியம் 2 மணிக்கு வந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது அவரை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் கொடி மரம் அருகே வந்த போது கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் ராஜகோபுரம் நுழைவு வாயிலை அடைத்து நின்றபடி நடிகை ரோஜாவுடன் செல்பி எடுத்து கொண்டனர்

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர். தங்களது பணியை மறந்து நடிகையுடன் அர்ச்சகர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் செல்பி எடுத்ததை பார்த்து பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com