ஜனாதிபதி தமிழகம் வருகை: கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் போலீசார் சோதனை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். குறிப்பாக சென்னைக்கு வருவதால் கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
ஜனாதிபதி தமிழகம் வருகை: கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் போலீசார் சோதனை
Published on

கும்மிடிப்பூண்டி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். குறிப்பாக சென்னைக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடாக சென்னையை அடுத்து உள்ள கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வெளியாட்களின் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா? பதிவில் உள்ளவர்கள் முகாமிலேயே தங்கி உள்ளனரா? என்பதனை கண்டறிய அகதிகள் துறை அதிகாரிகள், மாவட்ட கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து நேற்றும் இன்றும் முகாமில் திடீரென சோதனை நடத்தினர்.

குடும்ப அட்டையில் உள்ளது போல அனைத்து உறுப்பினர்களும் உள்ளனரா? அப்படி இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? என அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com