ஜனாதிபதி வருகை: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு

ஜனாதிபதி வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகை: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு
Published on

ராமநாதபுரம்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை  ராமேஸ்வரம் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை பகல் 3 மணி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வந்து இறங்கும் மண்டபம் ஹெலிபேட் தளம், அப்துல் கலாம் மணி மண்டபம் பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com