நாளை பிறந்தநாள் - அம்பேத்கர் பிறப்பிடத்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

அம்பேத்கரின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அம்பேத்கர் பிறந்த இடமான இந்தூர் அருகில் உள்ள மோவ் கிராமத்துக்கு செல்கிறார். #AmbedkarJayanthi #PresidentMhowVisit
நாளை பிறந்தநாள் - அம்பேத்கர் பிறப்பிடத்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி:

அம்பேத்கரின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அம்பேத்கர் பிறந்த இடமான இந்தூர் அருகில் உள்ள மோவ் கிராமத்துக்கு செல்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் தந்தை என போற்றப்படும் டாக்டர். பீமாராவ் அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அம்பேத்கரின் பிறந்த ஊரான இந்தூரை சேர்ந்த மோவ் கிராமத்தில் அவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கின. அவரது பிறந்தநாளான நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மோவ் கிராமத்துக்கு சென்று அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #AmbedkarJayanthi #PresidentMhowVisit

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com