வருகிற 1-ந் தேதி ஷீரடி விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

ஷீரடி விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 1-ந் தேதி திறந்து வைக்கிறார்.
வருகிற 1-ந் தேதி ஷீரடி விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்
Published on

ஷீரடி:

நாட்டின் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்களில் ஷீரடி சாய்பாபா கோவிலும் முக்கியமானதாக திகழ்கிறது. இங்கு வெளிமாநிலம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், ஷீரடியில் பக்தர்களின் வசதிக்காக விமான நிலையம் அமைக்க மராட்டிய விமான மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்துக்கான செலவு ரூ.350 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது.

இதில், ரூ.50 கோடி சாய்பாபா சனஸ்தான் அறக்கட்டளையிடம் இருந்து பெறப்பட்டது.

தற்போது விமான நிலைய கட்டுமான பணி முழுவதுமாக நிறைவடைந்து விட்டது.

இதன் திறப்பு விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, ஷீரடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இதையொட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிகட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என்று விமான மேம்பாட்டு நிறுவன துணை தலைவர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார்.

வழக்கமாக மும்பையில் இருந்து ஷீரடிக்கு சாலை மார்க்கமாக செல்ல 5 மணிநேரம் ஆகும். தற்போது, வான்வழியாக வெறும் 40 நிமிடத்தில் சென்றடையலாம். இதனால், ஷீரடிக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com