மொரீஷியஸ் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு போர்ட் லூயிஸ் விமான நிலையத்தில் இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. #RamNathGovind #Mauritiusvisit #Madagascarvisit
மொரீஷியஸ் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
Published on

போர்ட் லூயிஸ்:

மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறை பயணமாக செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் வந்தடைந்தார். மொரீஷியஸ் பிரதமர் பிரவின்ட் கக்நாத் மற்றும் அவரது மனைவி கோபிதா ஜக்நாத் ஆகியோர் ராம்நாத் கோவிந்த் தம்பதியரை பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

விமான நிலைய திடலில் சிவப்பு கம்பளம் விரித்து நடைபெற்ற அந்நாட்டின் முப்படை அணிவகுப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். பின்னர், மகாத்மா காந்தி பயிலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ராம்நாத் கோவிந் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அந்நாட்டின் ஜனாதிபதி அமீனா குர்ஜிப்பையும், பிரதமர் பிரவிண்ட் ஜுக்நாத்தையும் சந்தித்து பேசினார். 

நாளை மொரிசியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அங்கிருந்து வரும் 14-ம் தேதி மடகஸ்கர் நாட்டுக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதுவே மடகஸ்கர் நாட்டுக்கு ஒரு முக்கிய இந்திய தலைவரின் முதல் பயணமாகும். மடகஸ்கரில் அந்நாட்டின் ஜனாதிபதி ஹெரி ராஜோனரி மாம்பியானினாவை சந்தித்து பேசுகிறார். 

பின்னர் 15-ம் தேதி மடகஸ்கரில் இருந்து புறப்பட்டு இந்தியா திரும்புகிறார். #RamNathGovind #Mauritiusvisit #Madagascarvisit #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com