டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு

அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து: பிரணாப் முகர்ஜி பங்கேற்பு
Published on

புதுடெல்லி:

அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்தார். இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர்.

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதனால், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ரமலான் மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் இப்தார் விருந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிலும், இப்தார் விருந்து இன்று நடைபெற்றது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com