ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நாளை வருகை: அரக்கோணத்தில் பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜாளி கடற்படை தளத்திற்கு வருவதையொட்டி அரக்கோணத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நாளை வருகை: அரக்கோணத்தில் பலத்த பாதுகாப்பு
Published on

அரக்கோணம்:

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நாளை காஞ்சீபுரம் வர உள்ளார். இதற்காக டெல்லி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்திற்கு அவர் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரம் செல்ல உள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், எஸ்.பி. பகலவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதையொட்டி, டி.எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் அரக்கோணம் மற்றும் நெமிலி போலீசார் அரக்கோணத்தில் தீவிர பாதுபாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரக் கோணத்தில் உள்ள லாட்ஜ்கள், தனியார் தங்கும் விடுதிகளில் புதியவர்கள் யாராவது தங்கி உள்ளனரா? என்று சோதனை நடத்தினர். அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் வரை உள்ள சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com