முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் மோடி
வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் மோடி
Published on

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிகாரிகா ஆகியோரும் பங்கேற்றனர். 

இதேபோல் பாஜக அலுவலகங்களில் வாஜ்பாயின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படுகிறது. 

வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம்தேதி நல்லாட்சி தினமாக பாஜக சார்பில் கொண்டாடப்படுகிறது. மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்த அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com