கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கம்பாலா எருது போட்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

கர்நாடக மாநில அரசு கம்பாலா போட்டி நடத்த அவசர சட்ட மசோதாவை அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கம்பாலா எருது போட்டி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய விளையாடடு போட்டியாக கம்பாலா போட்டி நடத்தப்பட்டு வந்தது. சேரும் நீரும் கலந்த வயல் வெளிகளில் 2 எருதுகளை பூட்டி வேகமாக ஓட்டிச்செல்ல வேண்டும். இதில் வெற்றி பெறும் எருதுகளை ஓட்டிச் சென்ற விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கம்பாலா போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கர்நாடக மாநில அரசு கம்பாலா போட்டி நடத்த அவசர சட்ட மசோதாவை அந்த மாநில சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் கம்பாலா போட்டி விரைவில் நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com