ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 16ல் வங்காளதேசம் பயணம்

வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் என இரண்டு முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
Published on


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.

வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ‘ஆதார்’ கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com