மண்ணைத் தொட்டு வணங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
மண்ணைத் தொட்டு வணங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சொந்த ஊரில் கால் வைத்ததும் மண்ணைத் தொட்டு வணங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நாட்டின் முதல் குடிமகனாக பணியாற்றுவதுபோன்று கனவுகூட கண்டது இல்லை என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Published on

கான்பூர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தர பிரதேசத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பராங்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும் மண்ணை தொட்டு வணங்கினார்.

அங்கு  தம்மை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், தான் இன்று இருக்கும் நிலைக்கு காரணம், விடுதலை போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகம், இந்த கிராமம், இந்த மக்கள் அனைவரின் அன்பு தான் என்று குறிப்பிட்டார்.

சிறுவனாக இருந்த போது, நாட்டின் முதல் குடிமகனாக பணியாற்றுவதுபோன்று கனவுகூட கண்டது இல்லை என்றும், ஆனால் அத்தகைய ஒரு வாய்ப்பை நமது ஜனநாயக நடைமுறைகள் சாத்தியப்படுத்தி உள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொட​ந்து கிராமத்தில் உள்ள பத்ரி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் அம்பேத்கர் பவனுக்கு சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com