குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது

ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள கீழ்சுந்தரகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர், பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அஜித்குமாருக்கும், அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாகவும், அந்த சமயத்தில் அஜித்குமார், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது.

அதனால் இளம்பெண் 6 மாத கர்ப்பம் அடைந்தார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அஜித்குமார் வீட்டிற்கு சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு, அஜித்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இளம்பெண்ணின் தாயார் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com