புதுக்கடை அருகே கர்ப்பிணி தற்கொலை- போலீசார் விசாரணை

புதுக்கடை அருகே திருமணமான 10 மாதத்தில் கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுக்கடை:

புதுக்கடை அருகே கீழ்குளம் வடலிக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ். இவருடைய மகள் சுபி (வயது 26). இவருக்கும், விழுந்தயம்பலம் அருகே உள்ள புல்லாணி பகுதியை சேர்ந்த பாப்சன் என்பவருக்கும், 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுபி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

பாப்சனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதை சுபி கண்டித்ததால், இருவருக்கும் தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாப்சன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்ததாகவும், அப்போது பாப்சன் ஆத்திரம் அடைந்து, ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தியதாகவும், இதனால் அவர் கையில் ரத்தம் கொட்டியதாகவும் கூறப்படுகிறது. உடனே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதனால் மனம் உடைந்த சுபி, தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-கலெக்டர் சரண்யா அரி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com