பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பிக்கிலியில் பெரியூரைச் சேர்ந்தவர் சண்முகம்(27). கட்டிட மேஸ்திரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கம்மாள் (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரக்ஷிதா (1) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அங்கம்மாள் மீண்டும் கர்ப்பமானார்.  4 மாத கர்ப்பிணியான அவர் இடுப்பு வலியால் அவதிப்பட்டார். நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவர் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உறவினர்களுக்கும், பாப்பாரப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கம்மாள் என்ன? காரணத்திற்காக தூக்குபோட்டு கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் சப்-கலெக்டர் சிவன் அருள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com