ஈரோட்டில் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை

ஈரோட்டில் திருமணமான 2 வருடத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு பழைய கரூர் ரோடு மோகன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். ஜேசிபி டிரைவர். இவரது மனைவி கோபிகா (வயது 35).

தமிழ்ச்செல்வனுக்கும் கோபிகாவும் கடந்த 2 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கோபிகா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கோபிகா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார்.

கீழ்ப்பகுதியில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவர் குடும்பத்தினர் தூங்கினர்.

இந்நிலையில் தமிழ்ச்செல்வன் காலை மனைவியை பார்க்க மேல் அறைக்கு சென்றார். அப்போது அறையில் மனைவி கோபிகா தூக்குப் போட்டு பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆவதால் ஈரோடு ஆர்டிஓ முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com