

கோவை:
கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லோகநாயகி. கர்ப்பிணியான இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். கலெக்டரிடம் பிரச்சினை குறித்து மனு அளியுங்கள் என்று அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து லோகநாயகி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் மணிகண்டன் ஓட்டி சென்ற ஆட்டோ மீது தனியார் பஸ் ஒன்று மோதியது இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் எனது கணவர் மீது பொய் புகார்களை பதிவு செய்துள்ளனர். நாங்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.
எனவே எனது கணவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்வதுடன் எனது கணவருக்கு மிரட்டல் விடுத்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.