சிறுமியை கர்ப்பிணியாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

தா.பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கர்ப்பிணியாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை கர்ப்பிணியாக்கிய அரசு பஸ் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வி(வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் அந்த பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னையா(56) என்பவரும் நண்பர்கள். இதனால் சின்னையா அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் சின்னையா உல்லாசம் அனுபவித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த செல்வி திடீரென மயக்கமடையவே, அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி விசாரிக்கும் போது, சின்னையா, செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com